சென்னை,ஏப்.18- கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு ஞாயி றன்று (ஏப். 19) முதல் காலை 7.30 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் காய்கனி வாங்க வரும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்தில் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள் பின்பற்றவேண்டிய நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நட வடிக்கைகள் குறித்த ஆலோ சனைக் கூட்டம் சென்னை மண்டல கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
ஏற்கனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளிலேயே காய்கனி வாங்க அறிவுறுத்தப்பட்டு கோயம்பேடு மார்க்கெட் வளா கப் பகுதியில் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று தடுக்கும் வகையில் காய்கனி அங்காடிக்கு வருகை புரியும் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் பாது காப்பை உறுதி செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மார்க்கெட் பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மார்க்கெட் வளாக பகுதிக்கு காய்கனி மற்றும் மலர்கள் வாங்க இரு சக்கர வாகனத்தில் வருகை தரும் மொத்த மற்றும் சிறு வியாபாரி கள் ஞாயிறன்று (ஏப். 19)முதல் காலை 4.00 மணி முதல் காலை 7.30 மணிக்குள் தங்களுடைய வாகனங்களில் வந்து காய்கனி மற்றும் மலர்களை வாங்கிச் செல்ல வேண்டும். கோயம்பேடு காய்கறி அங்காடி வளாகத்தில் காலை 7.30 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் வந்து காய்கனி, மலர்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க வரும் நபர்கள் எவருக்கும் அனுமதி இல்லை. இதை மீறி மார்க்கெட் வளாக பகுதிக்கு வருபவர்களின் இருசக்கர வாகனங்கள் பறி முதல் செய்யப்படும். மூன்று மற்றும் நான்கு சக்கர சரக்கு வாக னங்களை கொண்டு காய்கறி களை வாங்க வருகைதரும் வியா பாரிகளுக்கு இந்த நேரக் கட்டுப்பாடு இல்லை.
அவ்வாறு மார்க்கெட் வளாக பகுதிக்கு வருகை தரும் வியாபாரி கள் அனைவரும் கண்டிப்பாக முக மூடி அணிந்து வரவேண்டும். வளாகத்திற்குள் உள்ள அங்காடி களுக்கு செல்லும் பொழுது கைகளை சுத்தமாக கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அங்காடிகளுக்கு வரும் சிறு வியாபாரிகள் ஆங் காங்கே கூட்டம் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியுடன் நிற்பதை மொத்த வியாபாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.
கோயம்பேடு காய்கனி அங்காடி பகுதியில் சுமார் 10,000 மொத்த வியாபாரிகள், சிறு வியா பாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பெரு நகர சென்னை மாநகராட்சியின் சார்பில் உடல் பரிசோதனைகள் மேற்கொள்ள இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.