tamilnadu

img

புதிய தகவல் தொழில் நுட்பக் கட்டடம்

கோயம்புத்தூர், நவ.5- கோவையில் எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்க ரில் 8 தளங்களுடன் கட்டப் பட்ட புதிய தகவல் தொழில் நுட்ப கட்டடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வா யன்று திறந்து வைத்தார்.

தென்னிந்தியாவின் மான் செஸ்டர் என கொண்டாடப் படும் கோயம்புத்தூர், தக வல் தொழில்நுட்ப நிறுவனங் களின் அடையாளமாகவும் மாறி வருகிறது. கோவை யில் தற்போது 700-க்கும் அதிகமான ஐ.டி. நிறுவனங் கள் உள்ளன. கோவையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 விழுக்காடு வளர்ச்சியை பெற்று வரு கின்றன.

இந்நிலையில், புதிய திட்டங்களை துவக்கி வைப்பதற்கும், நடைபெற்றுதிய தகவல் தொழில் நுட்பக் கட்டடம்

வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு மேற் கொள்ளவும், தமிழக முதல்வர் மு.க.  ஸ்டாலின் செவ்வாயன்று கோவை வருகை தந்தார். விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு மருத்துவக்கல்லூரி வரை திமுக நிர்வாகிகள் வரவேற்பளித்தனர்.

அதனைத் தொடர்ந்து விளாங்குறிச்சி சாலையில், டைடல் பார்க் வளாகத்தில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களு டன் 2 லட்சத்து 94 ஆயிரத்து 382 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில் நுட்பக் கட்டடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, மு.பெ. சாமிநாதன், வி. செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாக ராஜன், சு. முத்துசாமி, டி.ஆர்.பி. ராஜா, எம்.பி.க்கள் கணபதி பி. ராஜ்குமார், கே. ஈஸ்வரசாமி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தகவல் தொழில் நுட்ப வியல் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

3500 பேருக்கு வேலைவாய்ப்பு

இந்த புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடம், 3500 பேர் பணிபுரியும் வகையில், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டிருப்பது ஆகும்.  இங்கு செவ்வாய்க்கிழமை முதலே  ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படுவ தாகவும், முதற்கட்டமாக இரு நிறுவனங்  களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், டிசம்பர் மாதத்திற்குள் இந்தக் கட்டடம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்று எல்காட் நிறுவன நிர்வாக இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.

நில எடுப்பிலிருந்து 468.89 ஏக்கர் நிலங்களுக்கு முதல்வர் விலக்கு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை வழங்கப்பட்ட நிலங்கள் மற்றும் கையகப் படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகிய வற்றிற்கு தடையின்மை சான்று கோரியும், நிலம் எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத இப்பிரச்சனை குறித்து அரசிடம் மனுக்கள் அளித்து வந்தனர். இதையடுத்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆணை யம் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமை யில் சிறப்புக்குழு அமைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு, குழுவின் கவன மான பரிசீலனைக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் வீட்டுவசதி துறையினால் நிலமெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்ட இனங்களில், பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டத்தில் பயன்படுத்தப் படாத 1141.68 ஏக்கர் அளவிலான நில எடுப்பு உத்தரவுகள் திரும்பப்  பெறப்படுவதாக அரசாணை வெளியிடப் பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 3 வட்டங்களில், 9 வருவாய் கிராமங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் நில  எடுப்பு செய்ய அரசாணைகள் வெளியிடப் பட்டிருந்த- 640.81 ஏக்கர் நிலங்களில் தற் போது முதற்கட்டமாக 5,338 பயனாளி களுக்கு, 468.89 ஏக்கர் நிலங்களுக்கு விலக்களித்து ஆணையிடப்பட்டது.

இந்நிலையில், கோவை – அவிநாசி சாலை, சுகுணா மண்டபத்தில் செவ்வா யன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, விலக்களிக்கப்பட்ட நிலங்களின் உரிமை யாளர்களில் முதற்கட்டமாக கோவையை சேர்ந்த பத்து பேருக்கு நில விடுவிப்பு ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.