tamilnadu

img

சிறுத்தை நடமாட்டம்: கூண்டு வைத்த வனத்துறை

சிறுத்தை நடமாட்டம்: கூண்டு வைத்த வனத்துறை

பொள்ளாச்சி, அக்.29- ஆனைமலை, குப்புச்சிபுதூர் பகுதி யிலுள்ள விவசாயத் தோட்டம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், வனத்துறையினர் இப்பகுதியில் கூண்டு வைத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியில் ஏராளமான விவ சாய நிலங்கள் உள்ளன. இங்கு யானை,  காட்டெருமை, பன்றி மற்றும் சிறுத்தை  உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி  வருவதும், அவற்றை வனத்துறையினர்  வனப்பகுதியில் விரட்டுவதும் என  தொடர்கதையாக உள்ளது. இந்நிலை யில், செவ்வாயன்று நள்ளிரவு ஆனை மலை அடுத்த குப்பிச்சிபுதூர் மேட்டுப் பதி, ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்த  விவசாயி நிஷாந்த் என்பவரின் தோட்டத் தின் அருகே சிறுத்தை ஒன்று நடந்து செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து காட்சிகள் சமூக வலைதளங்க ளில் வைரலாகி வருகிறது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து  அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்  என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை  விடுத்தனர். இந்நிலையில், சிறுத்தை  நடமாட்டம் காணப்பட்ட இடங்களில்  வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட னர். பின்னர் சிறுத்தையை பிடிக்க அப் பகுதியில் புதனன்று கூண்டு வைத்து, சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.