tamilnadu

img

துரிதமாக செயல்பட்டு ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்திக்கொடுத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

29 வயது பெண்மணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அன்னூர் கைகாட்டி பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்திக்கொடுத்து உதவிய அன்னூர்  போலீசார்,.


நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்த 29 வயது பெண்மணிக்கு மூளை காய்ச்சலால் கடும் அவதிக்குள்ளாகினார். இதனை எடுத்து அவரை ஊட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளனர் இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் பெண்மணியை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது
 மேலும் ஆம்புலன்ஸ்க்கு முன்னரும் பின்னரும் வேறு சில ஆம்புலன்ஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டு காவல்துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது இதனை எடுத்து உஷாரான மேட்டுப்பாளையம் அன்னூர் போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்மணியை காக்கும் பொருட்டு ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க வழி எடுத்து ஏற்படுத்தி கொடுத்தனர் அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் அன்னூர் கைகாட்டி பகுதியில் போலீசார் பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என அனைவரும் ஒரு சேர நின்று வேறு வாகனங்கள் ஏதும் சாலையில் வந்து விடாத வண்ணம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்மணி ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்தனர் பின்னர் ஆம்புலன்ஸ் மிக விரைவாக சாலையைக் கடந்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சென்றது இதனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.