tamilnadu

img

சிம்பன்சிகளிடம் இருந்து வந்த இசை

சிம்பன்சிகளிடம் இருந்து வந்த இசை

புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் இசை போல அந்த இசையில்லை என்றாலும் சிம்பன்சிகள் சீரிசையை உருவாக்குகின்றன. அது மனிதரின் இசை போல இல்லை. ஆனால் அந்த இசை சங்கீதத்தின் அடிப்படை கட்டமைப்புகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது இசையின் பரிணாம வேர்களை ஆராய உதவுகிறது. வேர்களை தட்டி  ஏற்படுத்தும் இசை ஒழுங்கற்ற இந்த சீரிசை மில்லி யன்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிதப் பரிணாமத்தில் இசை  வந்த வழியை அறிய உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சிம்பன்சிகள் ஆழமற்ற வேர்களைக் கொண்ட மரங்களின் தரை மேல்  காணப்படும் அகலமான வேர்களை  (Buttress) தட்டி ஒருவருக்கொரு வர் தகவல்களைப் பரிமாறிக்கொள் கின்றன. ஒவ்வொரு சிம்பன்சி எழுப்பும் ஒலியும் தனித்துவமானது. என்றாலும் அவை சீரிசையுடன் இசையை உருவாக்குகின்றனவா என்று தெரியவில்லை. ஆனால் இந்த சீரிசை சிம்பன்சிகளின் துணைக் குழுக்களுக்கேற்ப வேறு படுகிறது. உரையாடலில் இருந்து இசையை உருவாக்கும் மனித சமூக  நடத்தையின் பரிணாமம் பற்றிய  ஆய்வில் இது ஒரு புதிய திருப்பு முனை என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர். “நாம் முன்பு பயன்படுத்திய அனைத்து வகையான சமூக நடத்தை மற்றும் இசை ஆகிய வற்றின் அடிப்படைக் கட்டுமான அம்சங்கள் நம் கடைசி மூதாதையரி டம் இருந்து வந்ததாகக் கருதப்படு கிறது” என்று செயிண்ட் ஆண்ட்ரூஸ்  (St Andrews) பல்கலைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரை யின் மூத்த ஆசிரியருமான பேராசி ரியர் கேத்தரின் ஹோபெய்ட்டர் (Prof Catherine Hobaiter) கூறு கிறார். முனைவர் பட்ட மாணவர் வெஸ்ட்டர் இலூட்டரி (Vesta Eleuteri) தலைமையில் நடந்த இந்த  ஆய்வு பற்றிய கட்டுரை கரண்ட் பயாலஜி (Current Biology) என்ற இதழில் வெளிவந்துள்ளது. கிழக்கத்திய மற்றும் மேற்கித்திய  சிம்பன்சிகள் என்ற இரண்டு துணைக்  குழுக்களைச் சேர்ந்த ஆறு கூட்டங்க ளில் இருந்து 47 உயிரினங்கள் உண்டாக்கிய 371 ஒலிகள் ஆரா யப்பட்டது. இரு குழுக்களின் ஒலிப் பாணிகள் ஒப்பிடப்பட்டபோது இரு வகைகளும் ஒழுங்கற்ற நேரத்தில் ஒலியெழுப்புவது தெரியவந்தது. மேற்கத்திய சிம்பன்சி ஒரு கடிகார முள் எழுப்பும் ஒலி போல எழுப்பிய இசைக்கு இடையில் ஒழுங்கான இடைவெளி இருந்தது. கிழக்கத்திய சிம்பன்சிகளின் இசை  குறுகிய மற்றும் நீண்ட இடைவெளி களுடன் ஒரு ஊஞ்சலாடுவது போல  மேலும் கீழுமாக அமைந்திருந்தது. மேற்கித்திய சிம்பன்சிகள் கிழக்கத்திய சிம்பன்சிகளைக் காட்டி லும் அதிக இசையை உருவாக்கின. ஒவ்வொரு ஒலிக்கு இடையிலும் ஒரே அளவிலான இடைவெளி காணப்பட்டது. ஒலியின் இசை வேகம் அதிகமாக இருந்தது. இசையின் பிறப்பும்  மனிதப் பரிணாமமும் இரு வகை உயிரினங்களும் வெவ்வேறு புள்ளிகளில் தட்டி ஒலி யெழுப்பின. இது பேண்ட்-ஹூட் அழைப்பு (pant-hoot call) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆய்வு உகாண்டா புடாங்கோ (Budongo) காடுகளில் சான்சோ (Sonso) சமூக  விலங்குகளிடையில் நடந்தது. துணைக் குழுக்களுக்கு இடையில்  அவை எழுப்பும் ஒலிகள் ஏன் வேறு படுகின்றன என்று ஆய்வாளர் களுக்குத் தெரியவில்லை. இந்த  வேறுபாடுகள் சூழல் அம்சங்களு டன் தொடர்பற்றது என்று கருதப் படுகிறது. சமூக வேறுபாடுகளால் இவ்வாறு நிகழலாம். கிழக்கித்திய சிம்பன்சிகளிடம் அதிக வன்முறைப் பண்பு காணப்படலாம் அல்லது அவை ஒருவருக்கொருவர் அதிக  அளவில் தகவல்களைப் பரிமாறிக்  கொள்வது இதற்குக் காரணமாக இருக்கலாம். “நீண்ட, குறுகிய, நீண்ட மற்றும் குறுகிய இடைவெளி இசைகள் போன்ற அதிக வேறுபாடு களுடன் கூடிய இசை இருந்தால் மோர்ஸ் செய்திகளை (morse code)  புரிந்துகொள்வது போல அதிக தக வல்களை நாம் பெறலாம். வெறும் கடிகார முட்களின் நகரும் ஒலியை விட இது அதிக பய னுடையது. சிம்பன்சிகள் மனித ரைப் போல இசை உருவாக்கு வதில்லை. என்றாலும் அந்த இசை யில் சில அடிப்படை அம்சங்கள் உள்ளன. இது மில்லியன் ஆண்டு கால இசைப் பரிணாமத் தோற்றம் பற்றி அறிய உதவுகிறது. ஆறேழு மில்லியன் ஆண்டு களுக்கு முன்பு, மனிதன் மனிதனா வதற்கு முன்பு பூமியை சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஏப் வகை உயிரி னங்கள் சிம்பன்சிகளாக பரிண மித்தன. இந்த இசையில் சில அடிப்படை சீரிசை அம்சங்கள் உள்ளன” என்று ஹோபெய்ட்டர் கூறுகிறார். இசையின் பிறப்பு பற்றிய  மனிதனின் மில்லியன் ஆண்டு கால  தேடலுக்கு இந்த கண்டுபிடிப்பு பெரி தும் உதவும் என்று நம்பப்படுகிறது.

யானைகளுக்கு ஏன் பெரிய காதுகள் இருக்கின்றன?

புத்திசாலித்தனம், சிக்கலான சமூக நடத்தை, நினைவாற்றல் மற்றும் பிரம்மாண்டமான காதுகள் உட்பட பெரிய உடல்அளவிற்கு யானைகள் பெயர்பெற்றவை. லாக்சொடண்ட்டா ஆப்பிரிக்கானா (Loxodonta africana) என்ற ஆப்பிரிக்க யானைகளின் காதுகள் 6.6 அடி/2 மீட்டர் நீளம் வரை மற்றும் 4 அடி/1.2 மீட்டர் அகலம் வரை வளரக்கூடியவை. எலிஃபஸ் மேக்சிமஸ் (Elephas maximus) என்ற ஆசிய யானைகளின் காதுகள் சற்று சிறியவை. வட்ட வடிவமானவை. அவற்றின் உடல் அளவில் இது 17%. பெரிய காதுகளில் உள்ள இரகசியம் யானைகள் பெரிய காதுகளுடன் உள்ள விலங்குகள் என்றாலும் உண்மையில் இந்த பெருமை அவற் றிற்குரியது அல்ல. யூகோரூட்ஸ் நாசோ  (Euchoreutes naso) என்ற அறிவியல்  பெயருடைய ஜெர்போவா (jerboa)  என்ற விலங்கிற்கே இப்பெருமை உள்ளது. இவை வட ஆப்பிரிக்கா முதல்  மத்திய ஆசியா வரை காணப்படு கின்றன. பாலைவனத்தில் வாழும் இவை கொறிக்கும் வகையைச் சேர்ந்தது. நீண்ட கால்களுடன் நிமிர்ந்து நிற்கக்கூடியவை. இருந்தாலும் யானைகளின் காது கள் 6 அடி வரை பெரியதாக உள்ளது வியப்புக்குரியதே. யானைகளுக்கு ஏன் இந்த அளவுக்கு காதுகள் பெரி தாக உள்ளன? இதற்கு பல நடைமுறை  காரணங்கள் உள்ளன. பெரிய காதுகள் யானைகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பயன்படுகின்றன என்று நுண் உயிரினங்கள் முதல்  பெரிய விலங்குகள் வரை ஆராயும்  மிக்சிகன் பல்கலைக்கழக தொல்உயிரி யல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யானைகளுக்கு மிகக் குறைந்த அளவு உரோமம் மட்டுமே உள்ளது. பதிலுக்கு குளிரூட்டும் ஏராளமான வேறு அம்சங்கள் அவற்றின் உடலில் காணப்படுகின்றன. பெரிய காதுகளில் இரத்தக் குழாய்கள் நிறைந்துள்ளன.  இவை உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றன. “அதன் உடல் வெப்பமடையும்போது அது தன் காதுகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பிறகு அது காதுகளை இரு பக்கங்களிலும் ஆட்டுகிறது” என்று  ப்ளோரிடா இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தின் முதுகெலும்பி கள் தொல் உயிரியல் துணை மேற்பார்  வையாளர் அட்வைட் ஜூக்கா (Advait Jukar) கூறுகிறார். யானையின் காது மெல்லிய தோலை உடையது. ஒரு சில  மில்லி மீட்டர் அளவு அடர்த்தியே அதற்கு உள்ளது. அதன் வழியாகச் செல்லும் இரத்தக் குழாய்கள் பெரியவை. யானை யின் ஒரு சமயம் நிகழும் இரத்த ஓட்டத்  தில் 20% அதன் காதின் வழியாகவே நடைபெறுகிறது. யானைகளின் புதை படிவ சான்றுகள் இதை உறுதி செய்கின்றன. ஆப்பிரிக்காவில் முத லில் தோன்றிய இன்றைய நவீன யானைகளின் முன்னோரான மாமூத்கள் குளிர்ந்த பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்ததால் காலப்போக்கில் சிறியவையாக மாறின. சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உரோமங்களுடன் உள்ள மாமூத்கள்  சவானா ஆப்பிரிக்கன் யானைகளுடன் ஒப்பிடும்போது சிறிய காதுகளைக் கொண்டுள்ளன. குளிர் அதிகமுள்ள அங்கு உடல் வெப்பநிலையை பரா மரிப்பதற்கே அவற்றிற்கு கடினமான  அடர்ந்த உரோமங்கள் இருந்தன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு மட்டும் இல்லாமல் யானைகளின் பெரிய காதுகள் வேறு வழிகளிலும் அவற்றிற்கு பயன்படுகின்றன. யானையின் பாதங்கள் ஒலி அலைகளை வடிகட்ட பெரிய  காதுகள் உதவுகின்றன என்று சில  ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் குறைந்த அதிர்வெண் உடைய ஒலி களையும் அவற்றால் கேட்கமுடிகிறது. பாதங்கள் வழியாகவும் அவை குறைந்த அதிர்வெண் கொண்ட அதிர்வுகளை உணரமுடியும். பாதங்க ளில் உள்ள பாசினியன் கொர்ப்பொஸ்கல்ஸ் (Pacinian corpuscles) என்ற ஏற்பிகள் உடல் வழி யாக அதிர்வுகளை கடத்துகின்றன. பாதங்கள் மற்றும் பிரம்மாண்ட காது எலும்புகள் மூலம் யானை கள் பல மைல்கள் தொலைவிற்கு தக வல்களைப் பகிர்ந்துகொள்கின்றன. பெரிய காதுகள் இந்த சமூக விலங்கு களுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள உதவுகின்றன. இவற்றால் தம் உடல் உறுப்புகளை அசைத்து சமிஞ்கைகளை அனுப்பமுடியாது. அதனால் இவை வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றன. கோபத்துடன் ஆக்கிரமிக்கத் தயாராகும் யானைகள் தன் காதுகளை முன்னோக்கி நீட்டி வேகமாக நகர்த்தி பெரிதாக காட்ட முயற்சிக்கும். அவை தாக்கத் தயாராக உள்ளன என்பதற்குரிய அறிகுறி அது. அந்த சமயத்தில் வாகனத்தை பின்னோக்கி எடுத்துச்செல்லவேண்டும். அந்த  இடத்தை விரைவாக காலி செய்ய வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறி வுறுத்துகின்றனர். இனி மேல் நீங்கள் ஒரு யானையைப் பார்க்கும்போது அதன் பெரிய காதுகளையும் கவனி யுங்கள். இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள்  உண்டு என்பதை இது எடுத்துக்காட்டு கிறது.