கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பின்படி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் பொது மக்கள் பார்வைக்கு மட்டும் பழைய பார்க்கிங் முதல் இரும்பு பாலம் வரை நடைப் பயணமாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.