கோவை,மார்ச்.19- கோவையில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மதுக்கரையை சேர்ந்த பத்மா (53) வழுக்குப்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்ற பதமா மாலை வீட்டிற்கு வரவில்லை, இரவு முழுவதும் வராததால் அவரது குடும்பத்தார் மதுக்கரை போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் நாச்சிபாளையம் வழுக்குப்பாறை சாலையில் ஓடை அருகே உள்ள காலி இடத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்குச் சென்று விசாரணையை துவங்கினர். அதில் சடலமாக மீட்கப்பட்டது மாயமான அரசுப் பள்ளி ஆசிரியை பத்மா என்பது தெரியவந்தது.
போலீசார் மோப்பநாய் உதவியுடன் அங்கு ஆய்வு மேற்கொண்டு, தடயவியல் துறையினர் மூலம் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர். இதையடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.