tamilnadu

img

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

தொகுதி மறுவரையறை எனும் சதியை அரங்கேற்ற முயல்வதா?

2026ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பில் (Delimitation) எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு இழைக்கப்படப் போகும் அநீதியை கண்டித்தும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்ற கோரிக்கையை முன்வைத்தும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தமிழ்நாடு, கேரளம், பஞ் சாப் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு,  ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டத் திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக, மக்களவையிலும், மாநிலங்களவை யிலும் விவாதம் நடத்த வேண்டும் என்று, காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மோடி அரசு அதற்கு அனுமதி அளிக்காமல், நாடாளுமன்ற ஜன நாயகத்தை சீர்குலைத்து வருகிறது. இந்நிலையிலேயே, மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுவரையறை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளு மன்ற வளாகத்தில் புதனன்று (மார்ச்  19) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், கனிமொழி என்விஎன் சோமு, பி. வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் அம்ரா ராம், ஆர். சச்சிதானந்தம், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஏ.ஏ. ரஹீம், டாக்டர் வி. சிவதாசன், டாக்டர் ஜான் பிரிட்டாஸ், விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.,  காங்கிரஸ் உறுப்பினர் எஸ். ஜோதி மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  “வஞ்சிக்காதே... வஞ்சிக்காதே.. தென் மாநிலங்களை வஞ்சிக் காதே..!’ என்றும், ‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைக் குறைக்காதே..’ என்றும் முழக்கங் களை எழுப்பினர்.