tamilnadu

img

குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்திய முதலமைச்சர் ரங்கசாமி

குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்திய முதலமைச்சர் ரங்கசாமி

மஞ்சள் அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிக்கும் மாத உதவி தொகை ரூ.1000 வழங்கப்படும்  என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் குடும்ப தலைவிக்கு  தலா  ரூ.1000 தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை  ரூ.2500 ஆக உயர்த்தி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரியில் 21 வயது பூர்த்தி அடைந்த 55 வயது மிகாமல் இருக்கும் அரசின் எவ்வித மான மாதாந்திர உதவி தொகையும் பெறாத வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.இந்த நிதி தற்போது ரூ.2500  பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு ரூ.786.56 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவி நிதி உதவி திட்டத்தின் கீழ் தற்போது வரை 56ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை பட்ஜெட் உரை மீது உறுப்பினர்கள்  பேசியதை தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.அப்போது அவர், சிறப்பு பொருளாதார மண்ட லத்திற்கான சேதராப்பட்டு நிலத்தில் தொழிற்பேட்டை விரைவில் அமையும் என்றும் சிவப்பு அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிக்கு மாத உதவித் தொகை ரூ.1000 த்தில் இருந்து  2500 வழங்கப்படுகிறது. மஞ்சள் அட்டை வைத்துள்ள  குடும்ப தலைவிக்கும் மாத உதவித்தொகை வழங்க உறுப்பி னர்கள் கோரியதை தொடர்ந்து அவர்க ளுக்கும் மாதம்  ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறி வித்தார். ரொட்டிபால் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் ரொட்டிபால் ஊழியர்களை பன்நோக்கு ஊழியராக (எம்டிஎஸ்) ஆக மாற்றி மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுவதற்கான கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் அந்த ஊதியம் கொடுக்கப்படும். ரூ.10 ஆயி ரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்த ஊதியம் நிச்சயம் எல்லா பணியாளர்களுக்கும் வழங்கப்படும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பிஆர்டிசி இல் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகிறது. வருவாயும் இப்போது அதிகரித்துள்ளது. கூடுதல் பேருந்து விடப்பட இருக்கிறது. இதனால் மேலும் வருவாய் உயர வாய்ப்புள்ளது. ஆகவே அதற்கு தகுந்தபடி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். எனவே இப்போது போடப்பட்டுள்ள பட்ஜெட்டில் தெரிவித்துள்ள அத்தனை திட்டங்களையும் அரசு விரைவாக செய்யும். இவ்வாறு  முதல்வர் அறிவித்தார்.