tamilnadu

img

விளைச்சலை அழிக்கும் கால்நடைகள் தடுக்க கோரி விவசாயிகள் மனு

விளைச்சலை அழிக்கும் கால்நடைகள்
தடுக்க கோரி விவசாயிகள் மனு

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கான்சாகிப் வாய்க்கால் பாசன விவ சாயிகள் சங்க செயலாளர் கே.கண்ணன் தலைமையில் விவசாயிகள் ராஜசேகர், சந்திரசேகர்,தியாகராஜன், ரவிச்சந்திரன், பட்டாபி, முருகன், ராஜலிங்கம், சந்திர மௌலி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.  அதில்  சிதம்பரம் வட்டம் திருவக்குளம் குறு வட்டத்திற்கு உட்பட்ட பொன்னந்திட்டு, கிள்ளை, பின்னத்தூர், கொடிப் பள்ளம், குமாரமங்கலம், நஞ்ச மகத்து வாழ்க்கை, வானம்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்க ளில் உளுந்து,  மணிலா மற்றும் நவரை நெல் பயிர் கள் நன்கு வளர்ந்துள்ளது. வளர்ந்த பயிர்களில் கால்நடை வளர்க்கும் பொது மக்கள் கால்நடைகளை கட்டுப்பாட்டில் வைக்காமல் விட்டு விட்டார்கள்.  இத னால் உளுந்து பயிர் மணிலா, நவரை நெல் பயிர்களின் நிலத்தில் இரவு பகலாக கால்நடைகள் மேய்ந்து அழிந்து வரு கிறது.  எனவே இதனை தடுப்பதற்கு நிரந்தர நட வடிக்கை எடுக்க வேண்டும், ஒலிபெருக்கி மூலம் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்தும் துண்டுப் பிரசுரம் கொடுத்தும் கால்நடைகளை கட்டுப்பாட்டில் வைத்து வளர்த்துக் கொள்ள வலியுறுத்த வேண்டும் என்றும்,  மீறும் கால்நடைகளை பிடித்து கால்நடை உரிமையாளர்க ளிடம் சேதத்திற்கு ஏற்ற வாறு நிவாரணம் வசூ லிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் விவ சாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பாற்ற நிலை ஏற்படும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கான்சாகிப் வாய்க்கால் பாசன விவ சாயிகள் சங்க செயலாளர் கே.கண்ணன் தலைமையில் விவசாயிகள் ராஜசேகர், சந்திரசேகர்,தியாகராஜன், ரவிச்சந்திரன், பட்டாபி, முருகன், ராஜலிங்கம், சந்திர மௌலி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.  அதில்  சிதம்பரம் வட்டம் திருவக்குளம் குறு வட்டத்திற்கு உட்பட்ட பொன்னந்திட்டு, கிள்ளை, பின்னத்தூர், கொடிப் பள்ளம், குமாரமங்கலம், நஞ்ச மகத்து வாழ்க்கை, வானம்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்க ளில் உளுந்து,  மணிலா மற்றும் நவரை நெல் பயிர் கள் நன்கு வளர்ந்துள்ளது. வளர்ந்த பயிர்களில் கால்நடை வளர்க்கும் பொது மக்கள் கால்நடைகளை கட்டுப்பாட்டில் வைக்காமல் விட்டு விட்டார்கள்.  இத னால் உளுந்து பயிர் மணிலா, நவரை நெல் பயிர்களின் நிலத்தில் இரவு பகலாக கால்நடைகள் மேய்ந்து அழிந்து வரு கிறது.  எனவே இதனை தடுப்பதற்கு நிரந்தர நட வடிக்கை எடுக்க வேண்டும், ஒலிபெருக்கி மூலம் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்தும் துண்டுப் பிரசுரம் கொடுத்தும் கால்நடைகளை கட்டுப்பாட்டில் வைத்து வளர்த்துக் கொள்ள வலியுறுத்த வேண்டும் என்றும்,  மீறும் கால்நடைகளை பிடித்து கால்நடை உரிமையாளர்க ளிடம் சேதத்திற்கு ஏற்ற வாறு நிவாரணம் வசூ லிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் விவ சாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பாற்ற நிலை ஏற்படும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.