3 இடங்களில் முதியோர் நலப்பிரிவு தொடங்கப்படும்
நிதிநிலை அறிக்கையில் மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு
3 ஆரம்ப சுகாதார நிலையங் களில் முதியோர் நலப்பிரிவு தொடங் கப்படும் என்று மேயர் ஆர்.பிரியா தெரி வித்துள்ளார், பெருநகர சென்னை மாநகராட்சி யின் 2025-26ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை புதனன்று (மார்ச் 19) தாக்கல் செய்யப்பட்டது. இதனை யொட்டி தொடக்கவுரையாற்றிய மேயர் ஆர்.பிரியா 62 அறிவிப்புகளை வெளி யிட்டார். சென்னை பள்ளிகளில் 10-12ஆம் வகுப்பு படிக்கும் ஆர்வமுள்ள மாண வர்களை தேர்ந்தெடுத்து போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்க ரூ.40.50 லட்சமும், சென்னை பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தி பரிசளிக்க 87 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்படும். வளமிகு ஆசிரியர் குழு காலாண்டு, அறையாண்டு தேர்வு களில் அதிக மதிப்பெண் பெறும் பள்ளி களில் உள்ள பட்டதாரி மற்றும் முது கலை ஆசிரியர்களைக் கொண்டு மண்ட லம் வாரியாக ‘வளமிகு ஆசிரியர் குழு’ அமைக்கப்படும். இவர்களை கொண்டு பிற பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இற்காக ரூ.75 லட்சம் செலவிடப்படும். ஒவ்வொரு வகுப்பறைக்கும் புவி உருண்டை வழங்குதல், தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்களை பணி யமர்த்துதல், பள்ளிகளுக்கு விளை யாட்டு உபகரணங்கள் வழங்குதல், மைதானங்களை சீரமைத்தல் பணிகள் செய்யப்படும். மேலும், விளையாட்டுப் போட்டி களில் கலந்துகொள்ளும் மாணவர்க ளுக்கு பயணம் மற்றும் உணவுப்படி யாக நாள் ஒன்றுக்கு ரூ.500 வழங்கப்படும். தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை பங்கு பெறும் மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் செலவில் காலணி(ஷூ) வழங்கப்படும். மழலையர் பள்ளி மழலையர் பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒரு மின்னணு பலகை நிறுவப்படும். 9-12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்க ளின் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்க்க பயிற்சி அளிக்கப்படும். மழலையர் பள்ளி வகுப்பறைக்கு பல வண்ணங் களில் மேசை மற்றும் நாற்காலிகள் வழக்கப்படும். 52 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் மின்னாக்கிகள் (ஜென ரேட்டர்கள்) நிறுவப்படும். அனைத்து தகன மேடைகளிலும் 15 கோடி ரூபாய் செலவில் மின்னாக்கி பொருத்தப்படும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை ரூ.5 கோடி செலவில் ஆவண காப்பகமாக பராமரிக்கப்படும். மூட்டு வலி, எலும்பு, தசை சம்மந்த ப்பட்ட நோய்கள் மற்றும் மனநலம் சார்ந்த நோய்களுக்கான சிகிச்சை பெற வரும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. எனவே, பி.ஆர்.என் கார்டன், செம்பியம், துரைப் பாக்கம் ஆகிய 3 ஆரம்ப சுகாதார நிலை யங்களில் ரூ.90 லட்சம் செலவில் முதியோர் நலப் பிரிவு தொடங்கப் படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோ சகர், ஒரு இயன்முறை சிகிச்சை நிபு ணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள். 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 24 மணி நேரம் செயல்படும் 3 மகப்பேறு மருத்துவ மனைகளுக்கு, மின் அதிர்வலைகள் மூலம் சீரற்ற இதயத் துடிப்பை சீராக்க உதவும் கருவிகள் வழங்கப்படும். நாய்களுக்கு தடுப்பூசி சென்னையில் உள்ள 1.80 லட்சம் நாய்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும். சிந்தாதிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப் படும். நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்க ளில் கூடுதலாக வளர்ப்புப் பிராணி களுக்கான மருத்துவமனைகள் ஏற்படு த்தப்படும். கண்ணம்மாப்பேட்டை செல்லப் பிராணிகள் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு அவசர சிகிச்சை மையம் அமைக்கப்படும். மூலக் கொத்தளம் மயான பூமியில், இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும்.