பெஞ்சல் புயல் நிவாரணம் கேட்டு
வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு
சிதம்பரம், மார்ச் 19- சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் சதானந்தம் தலைமை யில் விவசாயிகள் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் விக்டோரி யாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் சிதம்பரம் வட்டத்தில் புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட மேல மூங்கிலடி,, கீழ மூங்கிலடி, மேலசொக்க நாதன்பேட்டை, லால்புரம், சி.முட்லூர், தில்லை நாயக புரம், தீதாம்பாளையம், மேல் அனுப்பம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பெஞ்சல் புயல் நிவாரணம் கிடைக்கவில்லை. ஆனால் புவனகிரி வட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பெஞ்சல் புயல் நிவாரணம் கிடைத்துள்ளது. எனவே விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பெஞ்சல் புயல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட் டுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட துணை வட்டாட்சி யர் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து நிவாரணம் கிடைக்க நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.