tamilnadu

img

தேனி கருத்தரங்கில் நிதியளிப்பு

தேனி கருத்தரங்கில் நிதியளிப்பு

மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு சிறப்புக் கருத்தரங்கம் புதனன்று தேனியில் நடைபெற்றது. கட்சியின்  மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் ரூ.10லட்சம் நிதி வழங்கப்பட்டது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி,  மூத்த  தலைவர்கள் பேரா.அருணன், கே.ராஜப்பன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கையை நிறைவேற்றுக: எம்.சின்னதுரை எம்எல்ஏ

தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18 செவ்வாயன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த நிபுணர் குழு அமைத்துள்ளதை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மகாராஜா சமுத்திரம் வருவாய் கிராமத்தில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 2500 ஏக்கர் நிலப்பரப்பை தனிநபரின் ஆக்கிரமிப்பு முயற்சியிலிருந்து மீட்டு அந்த மக்களுக்கே உறுதி செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.