tamilnadu

img

ரூ.25 கோடி துணி உற்பத்தி இழப்பு

ரூ.25 கோடி துணி உற்பத்தி இழப்பு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சோமனூர், கண்ணம்பாளையம், தெக்க லூர், அவிநாசி மற்றும் பல்லடம் வட்டா ரத்தில் உள்ள 1 லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கவில்லை. 2022ஆம் ஆண்டு நெசவுக் கூலி ஒப்பந்தத்தில் இருந்து குறைக்கப்பட்ட கூலி உயர்வையும், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, இனிமேல் கூலியைக் குறைக்காமல் வழங்கும் வகையில், சட்டப் பாதுகாப்புடன் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். நியாயமான நெசவுக்கூலி உயர்வு கேட்டு கடந்த ஜனவரி முதல் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கறுப்புக் கொடி  ஏற்றிய போராட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும், தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதி காரிகளுக்கு 40 முறைக்கு மேல் நேரிலும், கடிதத்திலும் முறையிட்டும் எந்த தீர்வும்  ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை விசைத்தறி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி வரு மானத்தை இழந்துள்ளனர். நாளொன்றுக்கு  75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி நடை பெறும் நிலையில், இந்த உற்பத்திநிறுத்தம் காரணமாக ஏறத்தாழ ரூ.25 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஎம் கோரிக்கை இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ஆம் ஆண்டு போடப்பட்ட கூலி  உயர்வு ஒப்பந்தத்தை ஜவுளி உற்பத்தியா ளர்கள் தன்னிச்சையாக குறைத்துள்ளனர். குறைக்கப்பட்ட கூலியை 22ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி உயர்த்தி வழங்குவதுடன், தற்போதுள்ள கடுமையான விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, உதிரி பாகங்கள் விலையேற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நியாயமான கூலி உயர்வு வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து தமிழக அரசு  நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சட்டப் பாதுகாப்புடன், நியாயமான கூலி உயர்வு  ஒப்பந்தம் நிறைவேற்றித் தர வேண்டும்.  ஒன்றிய அரசு பின்பற்றும் பெரு முதலாளி களுக்கு ஆதரவான கொள்கைகள் காரண மாக ஒட்டு மொத்த சிறு, குறு, நடுத்தர  தொழில்கள், குறிப்பாக ஜவுளித்தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட கிராமப்புற பொருளாதாரத்துக்கு முக்கிய ஆதார மாக திகழும் விசைத்தறி தொழிலில் பல ஆயிரக்கணக்கான சாதா தறி உரிமையா ளர்கள், கடும் நெருக்கடியான நிலையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இப்பிரச்சனை யில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.