எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை யுடன் இணைக்கும் போது போலி வாக்காளர்களைக் கண்டறிய முடியும் என்றாலும், எந்தவொரு இந்திய ரும் தங்கள் வாக்குகளை இழக்கக்கூடாது என்பதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும், மேலும் தனியுரிமை பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
மக்களவை எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
மணிப்பூர் பட்ஜெட் விவாதத்தின் போது, கேரளாவை குற்றம் சாட்டுவதில் நிதியமைச்சர் அதிக ஆர்வம் காட்டினார். வயநாடு பேரழிவு ஏற்பட்டு 8 மாதங்கள் ஆகியும், அவர்கள் மறுவாழ்வுக்கான எந்த உதவியையும் ஒன்றிய அரசு செய்யவில்லை. அனுமதிக்கப்பட்ட கடன் வாங்கும் நடைமுறைக்கும் சாத்தியமற்ற நிபந்தனைகளை விதிக்கிறது.
பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
.நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்கு றுதிகளில் 75 சதவீதம் நிறை வேற்றப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள் மீதும், நாடாளு மன்றத்தின் மீதும் மோடி அரசு காட்டும் அவமதிப்பு இதுதான்
மக்களவை எம்.பி., பிரியங்கா காந்தி
இஸ்ரேல் அரசால் 130 குழந்தைகள் உட்பட 400 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு மனிதநேயமே இல்லை என்பதை காட்டுகிறது. அவர்களின் செயல்கள் அவர்களுக்குள் உள்ள பலவீனத்தையும் உண்மையை எதிர்கொள்ள முடியாத இயலாமையையும் காட்டுகின்றது.