காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு முடக்கி வருகிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இத்திட்டத்தில் வேலை நாட்களை 100இல் இருந்து 150 நாட்களாக உயர்த்த வேண்டும்.
ஆர்ஜேடி மூத்த தலைவர் பிரபு நாத்
லாலு பிரசாத் பிற்படுத்தப்பட்ட தலைவர். தலித்துகள் மற்றும் ஏழைகள் மத்தியில் அவரது புகழ் ஆளும்கட்சிகளுக்கு இலக்காக உள்ளது. லாலு ஏழைகளின் பக்கம் நிற்பவர் என்பதால்தான் பாஜக அவரை மத்திய அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுக்கிறது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
பாஜக கூட்டணி அரசாங்கம் கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிராவில் இந்து-முஸ்லிம் வன்முறையைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வன்முறை மூலமாக பாஜக கூட்டணி அரசியல் லாபத்தை ஈட்ட விரும்புகிறது. அதனால் தான் பாஜக மற்றும் அதன் நெருக்கமான அமைப்புகள் (ஆர்எஸ்எஸ் - விஷ்வ இந்து பரிஷத் - பஜ்ரங் தளம்) மாநிலத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றன.‘
தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா
“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கு எதிரானது. மேலும் இந்த மசோதாக்கள் சட்டச் சிக்கல்கள் கொண்டதாக உள்ளது. சட்டமன்ற தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்ற அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவது சரியான நடவடிக்கை அல்ல.