விசைத்தறித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, சிஐடியு விசைத்தறித் தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். விசைத்தறி, பஞ்சாலை அகில இந் திய ஒருங்கிணைப்பு கமிட்டியின் கோரிக்கை தினத்தை முன்னிட்டு, நாமக் கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசு திருத்தப்பட்ட நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். விசைத்தறி, பஞ்சாலை உள்ளிட்ட தொழில்களை யும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர் சங்க ஒன் றிய உதவித்தலைவர் குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துக்குமார், நிர்வா கிகள் முருகேசன், ஏ.அசன், எம்.ஜெய வேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.