tamilnadu

img

குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்த கூட்டம்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்த கூபள்ளிபாளையம் நகராட்சியில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது குறித்தான கலந் தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள் ளன. கோடைகாலம் நெருங்கி வருவதால் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பான கலந் தாய்வு கூட்டம், செவ்வாயன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, தண்ணீர் உறிஞ்சும் ராட்சத குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருக்கவும், அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீரை அள விட ஸ்கேல் பொருத்துவது, கண்டிப்புதூர் மற்றும் நேரு நகரில் இரண்டு டெலிவரி வால் பொருத்துதல், நீர் ஏற்றும் நிலையத்தில் வால்வு புதுப்பித்தல், 110 குதிரை திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்துதல் போன்ற பணிகளை போர்க்கால அடிப் படையில் செய்வது குறித்து ஆலோசிக்கப் பட்டது. இந்நிகழ்வில், நகர்மன்றத் தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பால முருகன், ஆணையாளர் தயாளன், பொறியா ளர் ரேணுகா, பிட்டர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ட்டம்