சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் உரிமையாளரான பஞ்சாப் விவசாயி
2007ஆம் ஆண்டு இந்தியன் ரயில்வே பஞ்சாப் மாநிலம் லூதி யானா - சண்டிகர் இடையே ரயில் பாதை அமைப்பதற்காக கட்டானா கிராமத்தை சேர்ந்த சம்பூரண் சிங் உள்பட பல விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியது. நிலத்தை வழங்கி யதற்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25 லட்சம் சம்பூரண் சிங்குக்கு வடக்கு ரயில்வே நிர்வாகம் வழங்கியது. அதே சமயம், பக்கத்து கிராமத்தில் உள்ள விவசாயிகள் இதே போன்ற நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ.71 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளனர். இதை அறிந்த சம்பூரண் சிங், ரயில்வே தன்னை நியாயமற்ற முறை யில் நடத்தியதாக உணர்ந்து அதிக இழப்பீடு தொகை கோரி 2012ஆம் ஆண்டு லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் நீதிமன்றம் விவசாயிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. முதலில் இழப்பீட்டை ஏக்கருக்கு ரூ.50 லட்சமாகவும், பின்னர் ஏக்கருக்கு ரூ.1.7 கோடியாகவும் உயர்த்தியது. நீதிமன்றத்தின் உத்தரவு இருந்த போதிலும், வடக்கு ரயில்வே சம்பூரண் சிங்குக்கு முழு தொகையை யும் வழங்கவில்லை. 2015ஆம் ஆண்டில் ரயில்வேயிடம் இருந்து ரூ.42 லட்சத்தை மட்டுமே வழங்கியது. ரயில்வே, எஞ்சிய ரூ.1.05 கோடியை வழங்கவில்லை.
இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை இந்திய ரயில்வே பின்பற்ற தவறியதால் 2017ஆம் ஆண்டில் மாவட்ட அமர்வு நீதிபதி ஜஸ்பால் வர்மா ஒரு கடுமையான நடவடிக்கை எடுத்தார். பாக்கி நிலுவை தொகைக்கு இழப்பீடாக லூதியானா ரயில் நிலையத்தில் ஸ்வர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தர விட்டது. மேலும் கூடுதலாக லூதியானா ரயில் நிலைய மாஸ்டர் அலுவலகத்தை யும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. நீதி மன்றத்தின் சட்ட உத்தரவை தொடர்ந்து, சம்பூரண் சிங் தனது வழக்கறிஞருடன் லூதியானா ரயில் நிலையத்துக்கு வந்து ரயிலை அபராதமாக கைப்பற்றி, அதன் தற்காலிக உரிமையாளராக மாறி னார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.