மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு
நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையி னால் பாதிக்கப்பட்ட பயிர்க ளுக்கு ரூ.4.07 லட்சம் இழப் பீடு தொகை வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் மற்றும் எருமப் பட்டி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கு வது குறித்து, மாவட்ட ஆட்சியர் ச.உமா செவ்வாயன்று கள ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழையால் மோகனூர் வட் டாரத்தில் 26 விவசாயிகள், எருமப்பட்டி வட் டாரத்தில் 13 விவசாயிகள் என மொத்தம் 39 விவசாயிகள் 23.955 ஹெக்டேர் பரப்பள வில் சாகுபடி செய்த நெல், சோளம், மக்காச் சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர் கள் சேதமடைந்தன. மழையினால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை யாக ரூ.4,07,235- வழங்கப்பட உள்ளது. பாதிப் படைந்த விவசாயிகளின் எண்ணிக்கை, சாகு படி செய்யப்பட்டுள்ள பரப்பளவு, பயிர்கள் உள்ளிட்ட விவரங்களை வேளாண் அலுவ லரிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.