திருச்சி விமான நிலையத்தை தனியாருக்குத் தரும் மோடி அரசு!
திருச்சி விமான நிலைய பராமரிப்பை தனியாருக்கு குத்தகை விட ஒன்றிய பாஜக அரசு முடிவுசெய்துள்ளது. விமான நிலையங்கள் தனியார்மயமாக்கல் தொடர்பான கேள்விக்கு, சிவில் விமான போக்கு வரத்துத்துறை சார்பில் மோடி அரசின் ஒன்றிய இணையமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அதில், “திருச்சிராப்பள்ளி, அமிர்தசரஸ், வார ணாசி, ராய்ப்பூர், புவனேஸ்வர் உள்ளிட்ட விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங் களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலமாக நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களுடன் லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களும் ஒரு தொகுப்பாக அளிக்கப்படும். அதாவது லாபத்தில் இயங்கி வரும் புவனேஸ்வர், அமிர்தசரஸ் விமான நிலையங்களுடன் நஷ்டத்தில் இயங்கி வரும் ஹூப்ளி மற்றும் காங்ரா விமான நிலை யங்களும் தனியாருக்கு தொகுப்பாக (Package) அளிக்கப்படும். அதேபோல்தான் லாபத்தில் இயங்கி வரும் ராய்ப்பூர் மற்றும் திருச்சி விமான நிலையங்களுடன் அவுரங்காபாத் மற்றும் திருப்பதி விமான நிலையங்களும் தனியாருக்கு அளிக்கப்பட உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் விமானப் போக்குவரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு பின் திருச்சி சர்வதேச விமான நிலையம் முக்கிய பங்காற்றி வரு கிறது. கடந்த வாரம் வெளியான தகவலின்படி திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உள்நாட்டு சேவையை பொறுத்தவரை சென்னை, மும்பை, தில்லி, பெங்களூர், ஐதராபாத் நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வெளிநாடுகளுக்கும் ஏராளமான விமா னங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கல்வி நிறு வனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் காரணமாக திருச்சி மாநகரம் வேகமாக வளர்ச்சியடைந்து வரு கிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. அரசு சொத்துகளை பணமாக்கும் திட்டத்தின் கீழ் 25 விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கும் திட்ட த்தின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக திருச்சி விமான நிலையம் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது.