tamilnadu

img

பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்

பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்

ஒன்பது மாதங்களாக விண்வெளியில் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்  புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு பத்திரமாக பூமியை வந்த டைந்தனர். சுனிதா வில்லியம்ஸூம், வில் மோரும், பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவார்களா, என்ற கேள்வியை பலர் எழுப்பி வந்த நிலையில், அறிவியல் தொழில்நுட்பம் அந்த கேள்விகளை உடைத்தெறிந்து, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோரையும், அவர்களை அழைத்து வருவதற்காக அனுப்பி வைக்கப் பட்ட 2 விண்வெளி வீரர்களையும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்துள்ளது. இது அறிவியலின், விஞ்ஞானி களின் மறக்க முடியாத சாதனை ஆகும். நல்ல உடல்நலத்துடன் சுனிதா வில்லியம்ஸ் தற்போது, விண்வெளி வீராங் கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோர் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளதாக நாசா தெரி வித்துள்ளது.

கடந்த 2024 ஜூன் 5-ஆம் தேதி இந்திய வம்சாவளி அமெரிக்க வீராங் கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளிநிலையத்தி ற்கு பயணம் மேற்கொண்டனர். 9 மாதங்களுக்கு நீண்ட  8 நாள் பயணம் வெறும் 8 நாட்கள் மட்டும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து, பணியை முடித்து விட்டு பூமிக்குத் திரும்புவது அவர் களின் திட்டம். ஆனால் இவர்கள் பய ணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இருவரும் சர்வ தேச விண்வெளி ஆய்வு மையத்தி லேயே தொடர்ந்து தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு வாரம் என்பது, ஒரு மாதம், இரண்டு மாதம் என்று 9 மாதங்களாகியும் அவர்கள் பூமிக்குத் திரும்ப முடி யாத நிலையில், பெரும் தவிப்பை ஏற்படுத்தியது. எலான் மஸ்க் உதவியை நாடிய நாசா இந்நிலையில், விண்வெளி  நிலையத்தில் சிக்கியிருக்கும் இவர்களை அழைத்து வருவதற்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் உதவியை நாடியது நாசா. எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவ னத்தின் ‘டிராகன்’ விண்கலம் மார்ச் 15 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானைச் சேர்ந்த டகுயா ஒனிஷி, ரஷ்யாவைச் சேர்ந்த கிரிஸ் பெஸ்கோஸ் ஆகியோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணம் மேற்கொண்டது. ‘பால்கன் எக்ஸ் 9’ ராக்கெட் மூலம் புறப்பட்ட அந்த விண்கலம், மார்ச் 16 அன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தது.

9 மாதத்திற்குப் பின்  பூமிக்குப் பயணம்

இந்த புதியக் குழு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த 2 நாட்களுக்குப் பிறகு,  9 மாதங்களாக தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அவர்களுடன் தற்போது சர்வ தேச விண்வெளி நிலையத்தில் உள்ள சக பணி யாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யா வின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி ஆய்வு மையத்தின் வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் செவ்வாயன்று காலை (இந்திய நேரப்படி) 10.15 மணிக்கு பால்கன் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குப் பயணப்பட்டனர்.

‘டிராகன்’ திட்டமிட்டபடி  கடலில் இறங்கியது

சுமார் 17 மணி நேர பயணத்திற்குப் பின், திட்டமிட்டபடி புதனன்று அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடல் பகுதியில் டிராகன் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது. கடலில் விழுந்த விண்கலத்தை கப்பலில் ஏற்ற 30 நிமிடங்களுக்கும் மேலாக முயற்சி நடந்தது. சரியாக காலை 3.57 மணிக்கு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக ஏற்றப் பட்டது. பின்னர் அதிகாலை 4.17 மணிக்கு விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர் ஒருவர் முதலில் அழைத்து வரப்பட்டார்.

4 வீரர்களும் பத்திரமாக மீட்பு

தொடர்ந்து, 4.23 மணிக்கு சுனிதா வில்லி யம்ஸ், வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் மீட்புப் படையினருடன் கை குலுக்கி, தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, 4.27 மணிக்குள் டிராகன் விண்கலத்தில் இருந்த 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்களும், தற்போது பத்திரமாக பூமிக்குத் திரும்பியதால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மறுவாழ்வு மையத்தில்  6 வாரம் பயிற்சி

சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் விண்வெளியில் 9 மாதங்கள் 13 நாட்கள் தங்கி யிருந்தனர். இதனால் அவர்கள் உட்பட 4 வீரர்களுக்கும் பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படலாம். குறிப்பாக அவர்க ளின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களால் எழுந்து நடக்க முடியாது என்பதால், 4 பேரும் மறு வாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர். 6 வாரங்கள் அங்கு அவர்க ளுக்கு மீண்டும் தரையில் கால் ஊன்றி நடப்பது உள்ளிட்ட சில தீவிர பயிற்சி அளிக்கப்படும். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் வழங்கப்படும். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு வீடுகளுக்கு செல்வார்கள் என நாசா தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர்,  முதல்வர் மகிழ்ச்சி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியதற்கு, சர்வதேச விஞ்ஞானிகள் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் உள்ளிட்டோர் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

பைடன் மீது மஸ்க் விமர்சனம்

‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் விண் கலத்தின் மூலம் பயணம் உறுதியான நிலையில் சில நாட்களுக்கு முன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எலான் மஸ்க் மற்றும் டிரம்ப்பிற்கு சுனிதா வில்லி யம்ஸ் நன்றி தெரிவித்திருந்தார். தற்போது, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்துள்ள நிலையில், நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், “அமெரிக்காவின் முந்தைய ஜனாதி பதி பைடன் நிர்வாகத்தின் அலட்சியம் காரண மாகத்தான் சுனிதா வில்லியம்ஸை மீட்பது தாமதமானது” என விமர்சிக்கத் துவங்கி யுள்ளார். எலான் மஸ்க் நிறுவனம் நாசாவுடன் மேற்கொண்ட இந்த வெற்றிப் பயணத்தின் காரணமாக வரும் நாட்களில் ‘எலான் மஸ்க்’  நிறுவன பங்குகள் மேலும் உயர வாய்ப்புள் ளது எனவும் அவருக்கு மேலும் மேலும் பல ஆயிரம் கோடி டாலர்கள் லாபமாக கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.