tamilnadu

img

கடலூரில் சிபிஎம் மாபெரும் கருத்தரங்கம்

கடலூரில் சிபிஎம் மாபெரும் கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி கடலூரில் செவ்வாயன்று (மார்ச் 18)  நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்  இந்தியாவின் சமூக முன்னேற்றத்திற்கு சோசலிசமே மாற்று என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர்  எஸ்.ஜி. ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ஆர். பஞ்சாட்சரம், மின்னரங்க செயலாளர் என்.தேசிங்கு, சிப்காட் செயலாளர் எம்.சிவானந்தம், போக்குவரத்து செயலாளர் பி.கண்ணன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கருத்தரங்கை தொடங்கி வைத்து திரைப்பட இயக்குனர் ராஜுமுருகன், தமிழ் இலக்கியத்தில் பொதுவுடமை கருத்துக்கள் என்ற தலைப்பிலும் தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் களப்பிரன், இந்தியாவின் சமூக முன்னேற்றத்திற்கு சோசலிசமே மாற்று என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.