மின் தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் பொறை யாரில் உள்ள பழுதடைந்த பொது மயானச் சாலையை சீரமைக்கவும், புதிய மின் தகன மேடையை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையாரில் உள்ள சந்தைவெளி பகுதியில் சிவன்கோவில் தெரு, குமரன் கோவில்தெரு, சந்தைவெளி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பட்ட மக்கள், தங்கள் உறவினர்கள் உயிரிழந்தவர்களின் சட லங்களை அடக்கம் செய்யவும், எரி யூட்டவும் பொது மயானத்தை பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது மயானத் திற்கு செல்லும் தார்ச்சாலை தற்போது கப்பிகள் பெயர்ந்து குண்டு குழியுமாக உள்ளதால், சடலத்தை அடக்கம் செய்வதற்காக தூக்கிச் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. மேலும் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூல தன மானியத் திட்டத்தின்கீழ் சந்தை வெளித்தெரு பகுதியில் சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மின்தகன மேடைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது பணிகள் முற்றிலும் நிறை வடைந்த நிலையில், கடந்த சில ஆண்டு களாக புதிய மின்தகன மேடை கட்டடம் திறக்கப்படாமல் பராமரிப்பின்றி செடி, கொடிகள் படர்ந்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் சந்தைவெளி பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீர மைக்கவும், புதிய மின் தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.