tamilnadu

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

ரூர் அருகே அரசுப் பள்ளியில் கழி வறையை சுத்தம் செய்யும் மாணவிகள் வீடியோ வைரலான நிலையில் தலைமை  ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர், காளிபாளை யம் பகுதியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இங்கு ஒன்றாம்  வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 23  மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரு கின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர், இடை நிலை ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள்  பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் ஆசி ரியர், மாணவர்கள் பயன்படுத்தும் கழி வறைகளை சுத்தம் செய்ய அரசு சார்பில்  குறைந்தபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனை பணியாளர்களைக் கொண்டு தூய்மை செய்ய வேண்டுமென பள்ளி  தலைமை ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தூய்மைப் பணியாளரை கழி வறையை சுத்தம் செய்ய பயன்படுத்தாமல், பள்ளியில் படிக்கும் மாணவிகளை கொண்டு தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய  வைத்துள்ளார். இந்நிலையில், மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட  பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி யில் உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை பூங்கொடி ஆகியோரிடம் விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையை தொடர்ந்து, காளிபாளையம் அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை பணியிடை நீக்கம் செய்து தொடக்க கல்வி  கரூர் மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப்  பள்ளிகளில் விரிவான ஆய்வுகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்  என்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.