உழவர் பணி துவக்கம்
திருவாரூர், மார்ச் 19 - குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட அலகு 1 மற்றும் அலகு 2 இன் மாணவ, மாணவிகள் இணைந்து ஆற்றும் உழ வர் பணி சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி மணப்பற வையில் நடைபெற்றது. இந்த உழவர் பணி மார்ச் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச் சியை கல்லூரி முதல்வர் இரா.பசுபதி துவக்கி வைத்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலகு 1 மற்றும் அலகு 2 இன் திட்ட அலுவலர்கள் அ. சுரேஷ் மற்றும் சோ. பிரபா ஆகியோர் நோக்க உரையாற்றினர். அனைத் துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலு வலகப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர் கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடவாசல் அங்காளபரமேஸ்வரி கோவில் வளாகத்தில் உழவர் பணி நடை பெற்றது.
போக்சோவில் தந்தை கைது
தஞ்சாவூர், மார்ச் 19 - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயது கூலித் தொழி லாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனித் தனியாக வசித்து வரு கின்றனர். இருப்பினும் 47 வயது கூலி தொழிலாளி யும், அவரது 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மகளும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில் தனது மக ளுக்கு, கூலித் தொழிலாளி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால், கடந்த சில நாட்களாக சிறுமி பள்ளி யில் சோர்வாக காணப்பட் டுள்ளார். செவ்வாய்க் கிழமை மாலை சிறுமி பள்ளியில் மயக்க மடைந்துள்ளார். இது குறித்து ஆசிரியர் சிறுமியிடம் விசாரித்த போது, தனது தந்தை பாலி யல் தொல்லை அளித்து வருவதாகக் கூறி அழுது உள்ளார். பிறகு, 1098 சைல்டு ஹெல்ப் லைன் மூலம் தகவல் தெரி விக்கப்பட்டது. ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, சிறுமியின் தந்தையை புதன்கிழமை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
ரத்த தான முகாம்
அரியலூர், மார்ச் 19 - அரியலூர் மாவட்டம், விளாங்குடியை அடுத்த காத்தான்குடிகாடு கிராமத் திலுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியி யல் கல்லூரியில், இளை ஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. முகாமை அக்கல்லூரி யின் முதல்வர் வீ.வெங்க டேசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். அரிய லூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் கே. சந்திரசேகர் தலைமையி லான மருத்துவக் குழுவி னர் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் என 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த வகைப் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் ரத்ததானம் அளிக்க வந்த தன்னார்வலர்களிடம் 63 யூனிட் ரத்தம் சேகரித்து, அவர்களுக்கு சான்றிதழ் களை வழங்கி கௌரவித்த னர்.