tamilnadu

img

தோழர் ஆர்.சோமசுந்தரம் காலமானார்

தோழர் ஆர்.சோமசுந்தரம் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் நகரப் பகுதி வசம்போடை கிளைச் செயலாளர் ஆர்.சோமசுந்தரம் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலமானார். இவர் நகரக் குழு உறுப்பினர் மூத்த தோழர் ஆர்.ராஜேந்திரனின் சகோதரர் மற்றும் ஆசிரியர் பிடல் காஸ்ட்ரோவின் தந்தை ஆவார். தோழரின் மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, பி.கந்தசாமி, பா.கோமதி ஆகியோர் அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  திருவாரூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.சுந்தரய்யா, நகரச் செயலாளர் எம்.டி.கேசவராவ், மூத்த தோழர்கள் என்.இடும்பையன், பி.மாதவன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். தோழரின் இறுதி நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.