பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்கிடுக
கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவை, டிச.16 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டுமா னத் தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழக அரசு கட்டுமானத் தொழிலா ளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழி லாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும். 2021 தேர்தல் வாக்குறுதிபடி ஓய்வூதிய ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும். கட்டுமானத்தொழிலாளர்க ளுக்கு பென்சன் தொகை ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்கிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூ தியம் வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்திற்கு ஆய்வு முடிந்த மனுக்க ளுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்கிட வேண்டும். ஒன்றிய அரசு தொழிலாளர்களுக்கு எதிராக அமல் படுத்தப்பட்ட சட்டத் தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நலவாரியத்தை முடக்கும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும். கட்டு மான பொருட்களின் கடும் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தி னர் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐ டியு மாவட்டத் தலைவர் கே.மனோக ரன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி, கோவை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வி. ஆனந்த், மாவட்டப் பொருளாளர் எம்.ஏழுமலை ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டு மானத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட துணைத் தலை வர் ஆர்.ரங்கசாமி நன்றி கூறினார். சேலம் சேலம் மாவட்டம், கோரிமேடு பகுதி யில் செயல்படும் கட்டுமான நல வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சேலம் ஜில்லா கட்டட தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், ஆட்டோ சங்க மாவட் டச் செயலாளர் சி. உதயகுமார், கட்டு மான சங்க பொதுச் செயலாளர் கருப் பண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் பி. விஜயலட்சுமி உள்ளிட்டு பலர் பங்கேற்ற னர். ஈரோடு ஈரோடு நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் கே. மாரப்பன், சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜ், பொருளாளர் கே.பழனி சாமி, உதவி தலைவர் எஸ்.மாதவன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு தருமபுரி மாவட்ட கட்டி டத் தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் சி. சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் சி.கலாவதி, மாவட்டப் பொருளாளர் சி.அங்கம்மாள், மாவட்ட நிர்வாகிகள் ஏ. முருகேசன், எம். சுரேஷ், சி. கோபால், உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
