ஆங்கில புத்தாண்டு கேக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்
- எம்.பிரபாகரன் - நாமக்கல், டிச.25- ஆங்கில புத்தாண்டுக்கு இ ன்னும் ஒரு சில நாட் களே உள்ளதால், அதை வரவேற் கும் வகையில் வாடிக்கையாளர் களுக்கு விற்பனை செய்வதற்காக நாமக்கல் மாவட்டத்தில் பேக்கரிக ளில் கேக்குகள் தயாரிப்பு பணி தீவி ரமடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 தேதிக்கு பிறகு, புதிதாக பிறக்கும் ஜனவரி முதல் தேதியை உலகம் முழுவதும் வெகு விமர்சையாக வரவேற்கும் வகையில் கொண் டாடுவது வழக்கம். வருடம் முழுவ தும் பல்வேறு இன்ப துன்பங்களை கடந்து, பிறக்கப் போகும் புத் தாண்டு சிறப்பானதாய் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு 12 மணி அளவில் கேக்குகள் வெட்டி பட்டாசுகள் வெடித்து புத் தாண்டை வெகு விமர்சையாக ஒவ் வொரு ஆண்டும் பொதுமக்கள் வர வேற்று வருகின்றனர். கிராமப்புற பகுதிகளில் அதி காலை நேரத்தில் புத்தாண்டை வர வேற்கும் வகையில் வண்ணக் கோலங்கள் இட்டு புத்தாண்டை வர வேற்பார்கள். அதே போல நகரப் பகுதிகளில் வணிக வர்த்தக கடை களில் புத்தாண்டு சிறப்பு விற்பனை யும், அதை ஒட்டி பல்வேறு நிகழ்வு களும் நடைபெறுவது வழக்கம். தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த் தனை நிகழ்வுகள் நடைபெறும். இப்படி பிறக்கப் போகும் ஆங்கில புத்தாண்டு பல்வகையான நிகழ்வு களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கேக்குகள் தயாரிப்பு பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நாமக்கல் ஈரோடு சாலையில் பேக்கரி நடத்தி வரும் பேச்சி முத்து என்பவர் கூறும் பொழுது, ஒவ்வொரு ஆண்டுமே புத்தாண்டு தினத்தைப் பொறுத்த வரை கேக்குகளை வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்கள் எண் ணிக்கை அதிகரிக்கிறதே தவிர எந்த வருடமும் குறைந்து காணப்பட்ட தில்லை. ஒவ்வொரு ஆண்டுமே புத் தாண்டை கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிக ரித்து வருவதாகவே தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவு கூட்டு குடும்பங்க ளாக இருந்த நிலையில், தற்போது தனி குடும்பங்கள் அதிகரித்துள் ளது. தனித்தனியே மிகக் குறைந்த அளவிலான கேக்கு களை வாங்கி செல்பவர்கள் எண் ணிக்கை கணிசமாக அதிகரித்திருப் பதாக தெரிகிறது. தற்போது கிறிஸ்துமஸ் பண் டிகைக்கு குறிப்பிட்ட அளவில் கிறிஸ்தவ பெருமக்கள் மட்டுமே அதிகளவு கேக்குகளை வாங்கிச் சென்றனர். இதை தவிர்த்து பார்த்தால் ஆங் கில புத்தாண்டு தான் அதிக அளவு கேக்கு விற்பனை நடைபெறும். இதற்கான ஆர்டர்கள் வர துவங்கி யுள்ளது. ஒரு கிலோ முதல் 30 கிலோ வரை தேவையை பொறுத்து ஆர் டர்களை பெற்று கேக்குகளை தயார் செய்து கொடுக்கிறோம். மேலும் நாங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள கேக் வகை களை காட்டிலும், ஒரு சிலர் புதிய வகையான டிசைன்களிலும், தங்கள் விருப்பத்தின் பெயரிலும் வேண்டுமென்று கேட்கிறார்கள். அவர்களுக்கு அதற்கேற்ற வகையில் தயார் செய்தும் கொடுக் கிறோம். கடந்த ஆண்டு ஒரு கிலோ கேக் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது முட்டை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வால் ஐம்பது ரூபாய் சேர்த்து ஒரு கிலோ 350 ரூபாய் என விற்பனை செய்து வருகிறோம். அதேபோல பிளாக் பாரஸ்ட் எனப்படும் சில உயர்தர கேக்கு களை 600 ரூபாய் முதல் விற்பனை செய்து வருகிறோம். வருடம் முழு வதும் பிறந்தநாள், திருமண நாள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு கேக்குகள் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், வருட கடைசியில் டிசம்பர் மாதம் 20 தொடங்கி 31 ஆம் தேதி வரை அதி களவு கேக் தயாரிப்பு பணிகள் இருக்கும். இதன் காரணமாக கணிசமான அளவில் கேக்கு தயாரிப்பு தொழிலை சார்ந்த தொழிலாளர் கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ள னர். தொடர்ந்து 30 ஆம் தேதி இரவு வரை கேக்குகளுக்கான ஆர்டர் கள் பெறப்பட்டு, தொடர்ந்து வாடிக் கையாளர்களுக்கு வழங்குவதற் கான பணிகளை மேற்கொண்டு வரு கிறோம். பிறக்கப் போகும் புத் தாண்டு எல்லாருக்கும் சிறப்பான தாக இருக்க வேண்டும் என கேட் டுக் கொள்வதாக கூறினார்.
