சாலையில் நின்ற யானையால் பரபரப்பு
உதகை, ஜன.11- உதகையிலிருந்து கல்லட்டி வழியாக மசினகுடி செல்லும் மலைப்பாதையில் ஒரு மணி நேரம் சாலையில் நின்ற யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து கல் லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி மற் றும் மைசூரு-க்கு தேசிய நெடுஞ்சாலை செல் கிறது. இந்நிலையில், சீகூர் பாலம் அருகே சுமார் 40 வயது மதிக்க ஆண் யானை ஒன்று சாலை நடுவில் நின்றபடி ஒரு மணி நேரத்திற்கு மேலாக, சாலையோரத்தில் இருந்த மரத்தின் செடிகளை உடைத்து சாப்பிட்டவாறு நின் றது. இதனால் இருபுறமும் பல வாகனங் கள் அணிவகுத்து நின்ற நிலையில், சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென் றது. இதையடுத்து அனைத்து வாகனங்க ளும் புறப்பட்டு சென்றன. இச்சம்பவத்தால் கல்லட்டி மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
