tamilnadu

img

உச்சம் தொடும் முட்டை விலை

உச்சம் தொடும் முட்டை விலை

நாமக்கல், டிச.16- நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும்  முட்டை விலை 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயரத் தொடங்கிய முட்டை விலை இந்த வருடத்தின் மூன்றாவது முறையாக வரலாற்றின் புதிய  உச்சத்தை அடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உற் பத்தியாகும் முட்டைகளுக்கான  விலையை நாமக்கல்லில் உள்ள  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும்  நிர்ணயம் செய்து வருகின்றன. 22 நாட்களுக்கு பிறகு  உயரத் தொடங்கிய முட்டை ஒன்றின் கொள்முதல் விலை  ரூ.6.20 ஆக இருந்த நிலையில், 5 காசுகள் உயர்த்தப்பட்டு 6  ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  22 நாட்களுக்கு முன்னர் 6 ரூபாய் 10 காசுகளாக இருந்த  நிலையில், 22 நாட்களுக்கு பிறகு 10 காசுகள் உயர்ந்துள் ளது. இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கி உள்ள தால் அங்கு முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. நாமக்கல் மண் டலத்திலும் குளிர் காலம் தொடங்கியதால் முட்டை உற்பத்தி  5 சதவிகிதம் குறைந்துள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத் தாண்டு பண்டிகை வருவதால் முட்டையின் தேவை அதி கரித்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை அதிகரித்து வருவதோடு வரும் நாட்க ளில் மேலும் உயரும் என தெரிவித்தனர். 50 ஆண்டுகால கோழி பண்ணை வரலாற்றின் புதிய உச்சத்தை அடைந்துள் ளது.