tamilnadu

img

கல்வி ஆர்.எஸ்.எஸ் மயமாக்கப்படுகிறது...

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடமும் அளித்துள்ளார்.

வீடு வீடாக உரையாடல்
புதிய கல்விக் கொள்கையை கண்டித்து ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வடிவத்தில் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வரு கின்றன.கேரளாவில் வீடு வீடாகச்சென்று இக்கல்விக் கொள்கையின்ஆபத்து குறித்து மக்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் 5000 இடங்களில் தெருமுனை பிரச்சார கூட்டங் களும், ஒரு கோடி மக்களிடம் கையெழுத்துபெற்று மத்திய அரசிற்கு அனுப்புவதற்கான இயக்கங்கள் நடைபெற்று வருகின்றது. மேலும், தமிழகத்தில் இந்த புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பல்வேறு இயக்கங்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வருவது வரவேற்கத்தக்கது.  இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரான இந்த கல்விக்கொள்கை முற்றிலுமாக எதிர்க்கப்பட வேண்டியதாகும். அனைத்து இந்திய மொழி களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று ஜனநாயகப் பூர்வமான ஒரு விவாதத்தை நடத்தி  ஒரு மாற்று கல்விக்கொள்கையை உருவாக்க வேண்டும் என எம்.ஏ.பேபி தெரிவித்தார்.

ஜி.ராமகிருஷ்ணன்
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், மத்திய அரசுகொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து பெரிய விவாதம் நாடு முழுவதும்  நடைபெற்று வருகிறது. இந்த கல்விக் கொள்கையை திருத்தம் செய்யவேண்டாம், முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழகத்தில் 5000 த்திற்கு மேற்பட்ட தெருமுனை கூட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளைக் மூடிவிட்டு இலவச கல்விசாத்தியமில்லை. காசு உள்ளவர்களுக்கு தான் உயர்கல்வி என்றுஇந்த அறிக்கையில் சொல்லியிருப்பது நவீன தாராளமயக் கொள்கையை புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு புகுத்தியிருக்கிறது. இந்த  புதிய கல்வி கொள்கை  குறித்துமாநில அரசாங்கம் ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்றார்.