கோவை:
தடுப்பூசி செலுத்த வந்த கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கொரோனா நோயாளிகள் மின்விசிறி இல்லாமல் படும் கஷ்டத்தை கண்டு தங்களுடைய நகைகளைஅடமானம் வைத்து இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகளை வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை ராம்நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் அதே பகுதியில் சிறுகடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள்சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு தடுப்பூசி போட சென்றுள்ளனர்.
ங்கு உள்ள நோயாளிகளின் மின்விசிறிஇல்லாமல் படும் கஷ்டத்தை பார்த்துள்ளனர். இதனையடுத்து தங்களுடைய நகைகளை ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அடகு வைத்து 100 மின்விசிறிகளை வாங்கியுள்ளனர். இதனை இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் வழங்கினர். மேலும், தங்களது பெயர் விவரங்களையும் கூற மறுத்துவிட்டார்கள். ஆனால் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் இவ்வளவு மின்விசிறிகள் வேண்டாம், பாதியை எடுத்துக் கொண்டு உங்களுடைய நகைகளை மீட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் நோயாளிகளுக்காக வாங்கி வந்தது; இதை திரும்ப எடுத்துச் செல்லமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரும், மனமுவந்து வாங்கி வந்துள்ளதை மறுக்க வேண்டாம் பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து மின்விசிறிகளையும் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துள்ளனர். நகையை அடகு வத்து இஎஸ்ஐ மருத்துவமனைக்கு நோயாளிகளுக்காக கொடுத்துவிட்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.