tamilnadu

img

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறைந்தது மனம் திட்ட பயனாளிகளிடம் ஆட்சியர் கலந்துரையாடல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறைந்தது மனம்  திட்ட பயனாளிகளிடம் ஆட்சியர் கலந்துரையாடல்

மயிலாடுதுறை, டிச.11-  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தாட்கோ மற்றும் தொழிலாளர் நலவாரியம் சார்பில் “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்  கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான ஆட்டோவினை பயனாளியிடம் வழங்கி, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், எருக்கூர் கிராமத்தைச் சார்ந்த ரீட்டாமேரி என்ற பயனாளிக்கு மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் திட்டம், தாட்கோ துறை சார்பில் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் தொழிலாளர் நலவாரியம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய  திட்டங்களின் கீழ், ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான ஆட்டோவினை வழங்கி, மாவட்ட ஆட்சியர், திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினார். அப்போது அன்த பயனாளி என் கணவர் ஒரு எதிர்பாராத விபத்தில் இறந்து விட்டார். எனது அன்றாட செலவினங்களை எதிர்கொள்ள நான் மிகவும் சிரமப்பட்டு வந்தேன். எனது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் என்னைப்போன்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்கள். அதன்பிறகு, நான் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் உள்ள அலுவலர்களை நேரில் சென்று என் நிலைமையை எடுத்துக் கூறினேன். எனக்கு ஆட்டோ ஓட்ட தெரியும் என்றும், பயணிகள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளேன் என்று கூறியதன் அடிப்படையிலும், எனக்கு மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் திட்டம், தாட்கோ துறை சார்பில் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் தொழிலாளர் நலவாரியம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களின் கீழ், விண்ணப்பிக்குமாறு அறிவுரை வழங்கினர்.  பிறகு, விண்ணப்பம் மற்றும் அதற்கான உரிய சான்றிதழ்களை அலுவலர்களிடம் வழங்கினேன். அதனைத் தொடர்ந்து, எனது விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து, எனக்கு ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான ஆட்டோவினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  இத்திட்டத்தை வழங்கிய முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் எனது, நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.