tamilnadu

img

கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவி தற்கொலை கல்லூரி நிர்வாகம் திருட்டு பட்டம் கட்டியதாக குற்றச்சாட்டு

கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவி தற்கொலை கல்லூரி நிர்வாகம் திருட்டு பட்டம் கட்டியதாக குற்றச்சாட்டு

இந்துஸ்தான் ஹெல்த் அண்டு  சயின்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒரு வர், கல்லூரியின் நான்காவது மாடி யில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி  நிர்வாகம் மாணவி மீது திருட்டுப்பட் டம் கட்ட முயற்சித்ததால் மன உளைச் சலுக்கு ஆளான பெண் தற்கொலை  செய்து கொண்டதாக சக மாணவர் கள் குற்றம்சாட்டினர். திருவண்ணாமலை மாவட்டம் நொ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் - வானதி தம் பதியின் மகள் அனுப்பிரியா (19).  தந்தை கோவிந்தராஜ் ஆறு ஆண்டுக ளுக்கு முன்பு காலமான நிலையில், தாய் வானதி கோவிலில் தூய்மைப் பணி செய்து வருகிறார். கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந் துஸ்தான் கல்லூரியில் சுவாச சிகிச்சை பிரிவில் முதலாம் ஆண்டு  விடுதியில் தங்கிப் படித்து வந்த  அனுப்பிரியா, கடந்த செவ்வாயன்று இரவு கல்லூரி மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த பீள மேடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். முதற் கட்ட விசாரணையில், மருத்துவ மனையில் பயிற்சிக்கு வந்த ஒரு நப ரின் ரூ.1,500 பணத்துடன் இருந்த  கைப்பை காணாமல் போனதாகவும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பிரியா மற் றும் மற்றொரு மாணவரை அழைத்து  விசாரித்ததாகவும் தெரிய வரு கிறது. இந்த மன உளைச்சலே மாண வியின் தற்கொலைக்கு காரணம் என வும் கூறப்படுகிறது. இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் திரண்ட மாண வியின் உறவினர்கள் மற்றும் சக  மாணவ-மாணவிகள், அனுப்பிரியா வின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும்,  கல்லூரி முதல்வர் அறையில் ஆறு  மணி நேரம் நடைபெற்ற விசாரணை யில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என் றும், மாணவியின் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உடலை வாங்க  மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். கல்லூரி முதல்வர் மணிமொழி மற்றும் ஆசிரியைகள் உமா, லாவண்யா ஆகியோர் நேரில் வந்து  விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த முதல் வர் மணிமொழியுடன் உறவினர்கள்  மற்றும் மாணவர்கள் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். அவர்களை வெளியே செல்ல விடாமல் தடுக்க வும் முயன்றனர். தொடர்ந்து, கல் லூரி நிர்வாகம், போலீசார் மற்றும் உறவினர்கள், மாணவர்கள் பிரதிநிதி கள் இடையே பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில், மாணவி தற் கொலைக்கு காரணமான முதல் வரை பணியில் இருந்து நீக்க வேண் டும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீசார் முறையாக விசாரணை நடத்த வேண்டும் மற்றும் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.10  லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்  ஆகிய கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டன. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், கல்லூரி நிர்வாகத்தினர் ரூ.5  லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டனர். மேலும், மாணவர்க ளின் கோரிக்கைகளை எழுத்துப்பூர் வமாகப் பெற்றுக் கொண்டனர். இத னைத் தொடர்ந்து, மாணவி அனுப் பிரியாவின் உடல் பிரேத பரிசோ தனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் திருவண்ணா மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்க ளிடம் பேசிய மாணவியின் தாயார்  வானதி, போலீசார் உரிய வழக்கு  பதிவு செய்யவில்லை என்றும், சம்பந் தப்பட்டவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.