இரட்டைச்சிறுவர்களுக்கு அதிநவீன செயற்கை கால்கள் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை சாதனை
கோவை, மே 14 – கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மூன்று வயது இரட்டைச் சிறுவர்களுக்கு அதிநவீன செயற்கை கால்கள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழகத்திலேயே அரசு மருத்துவ மனையில் இதுபோன்ற எடை குறைந்த செயற்கை கால்கள் குழந்தைகளுக்கு பொருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கிணத்துக்கடவு சொக்கனூரைச் சேர்ந்த முத்துகுமாரின் மகன்கள் ரிஷ் வந்த் மற்றும் ஜஸ்வந்த் ஆகிய இரு வருக்கும் பிறவியிலேயே இரு கால்களி லும் தசைப்பிளவு பாதிப்பு இருந்தது. இதனால் நடக்க முடியாமல் தவித்த இந்த இரட்டைச் சிறுவர்கள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் எலும்பு முறிவு பிரிவில் அனு மதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட வலது கால் முட்டிக்கு கீழ் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பின் னர், சிறுவர்கள் உடலியல் மற்றும் மறு வாழ்வு மருத்துவ சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை கால் பொருத்த அளவீடுகள் எடுக்கப்பட் டன. முதலமைச்சரின் விரிவான காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் உடல் உறுப்புகள் தயாரிக்கும் நிறுவனம் மூலம் எடை குறைந்த அதிநவீன செயற்கை கால்கள் உருவாக்கப் பட்டன. வெற்றிகரமாக பொருத்தப்பட்ட இந்த செயற்கை கால்களைப் பயன் படுத்துவதற்கான பயிற்சியும் சிறு வர்களுக்கு அளிக்கப்பட்டது. தற் போது ரிஷ்வந்த் மற்றும் ஜஸ்வந்த் இரு வரும் தாங்களாகவே நடப்பதுடன், தங்களது அன்றாட பணிகளையும் சிரம மின்றி செய்து வருகின்றனர். ரிஷ்வந்த்திற்கு பொருத்தப்பட் டுள்ள செயற்கைக் காலின் எடை 500 கிராமுக்கும் குறைவானதாகும். இலகு வாக நடப்பதற்கு வசதியாக அதிநவீன கார்பன் பைபர் பாதம் மற்றும் கால் முட்டி மூலம் இந்த செயற்கை கால் கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மருத்துவமனை முதல் வர் நிர்மலா கூறுகையில், “சில ஆண்டு களுக்கு முன்பு வரை கை, கால்கள் அகற்றப்பட்ட நோயாளிகள் செயற்கை அவயங்களுக்காக சென்னை சென்று சிகிச்சை பெற வேண்டியிருந்தது. 2020 முதல் கோவை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையிலேயே செயற்கை உடல் உறுப்புகள் தயா ரிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் பயன டைந்து வருகின்றனர். தற்போது வரை, முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்று தெரி வித்தார்.