tamilnadu

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் மாநாட்டு இலட்சினை வெளியீடு

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் மாநாட்டு இலட்சினை வெளியீடு

கோவை, அக்.2- சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, பிஎஸ் என்எல் டாட் ஓய்வூதியர் சங்க அகில இந்திய மாநாட்டிற் கான இலட்சினை வெளி யிடப்பட்டது. கோவை தாமஸ் கிளப் பில் புதனன்று மத்திய, மாநில, பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் சர்வதேச முதியோர் தினம் மற்றும் ஓய்வூதிய பாதுகாப்பு நாள்  கொண்டாடப்பட்டது. பொதுத்துறை ஓய்வூதி யர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் என்.அரங்கநா தன் துவக்கவுரையாற்றினார். பிஎஸ்என்எல் டாட் ஓய்வு சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குடியரசு வரவேற்றார். மாநிலச் செயலா ளர் ஆர்.ராஜசேகரன், அஞ்சல் ஆர்எம்எஸ் மண்டலத் தலைவர் எஸ்.கருணாநிதி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.மதன் ஆகியோர் உரை யாற்றினர். இந்நிகழ்வில், டிச.17,18 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ள பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க அகில இந்திய மாநாட்டிற்கான இலட்சினை (லோகோ) வெளியிடப்பட்டது. முடிவில், அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்க  ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுரேந்திரன் நன்றி கூறினார். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் பூங்கா சாலை யில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.கே.இராமசாமி தலைமை வகித்தார். இதில் மாநில அமைப்பு செயலாளர் எஸ்.அழகிரிசாமி, ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குப்புசாமி, நிர்வாகிகள் எஸ்.சின்னுசாமி, இளங்கோ வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.