tamilnadu

img

கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேருக்கு லஞ்சம் - 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

கோவை அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்ல ரூ.100 லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, 2 ஊழியர்கள் 5 நாட்களுக்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட முதியவரை அவரது மகன் தூக்கி செல்வது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் மருத்துவமனை முதல்வர் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். 
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா கூறுகையில், இதுவரை ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக புகார் எதுவும் வரவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.