பூமிக்கு மிக அருகில் 2025 QV9 என்ற சிறிய விண்கல் கடந்து சென்றது. சுமார் 100 அடி நீளம் கொண்ட இந்த விண்கல், ஒரு மணி நேரத்திற்கு பத்தாயிரம் மைல்கள் வேகத்தில் பய ணித்திருக்கிறது. நல்வாய்ப்பாக இது பூமியைத் தாக்கவில்லை. இந்த நிகழ்வு, விண்வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள அறிவியல் கண்காணிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் உணர்த்தி யிருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனா எதிர்காலத் தில் பூமியை நோக்கி வரும் அபாயகரமான விண் கற்களை, அவை மோதும் முன் திசை திருப்புவதற் குத் தேவையான தொழில்நுட்பத்தை மேம்படுத்து வதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
இந்தச் சூழலில், நம் நாட்டில் அரங்கேறி வரும் சில நிகழ்வுகள் கவலையளிக்கிறது. ராஜஸ்தா னில் நடைபெற்ற பசுக்களுக்கான உலக உச்சி மாநாட்டில், பசுவின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப் படும் மருந்துகள் கேன்சர் முதல் ஆஸ்துமா வரை யிலான அனைத்து வியாதிகளையும் குணப்படுத் தும் என விளம்பரம் செய்யப்படுகிறது. இதில் கல்வி அமைச்சர் பங்கேற்கிறார். அத்தகைய மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதும் அதிர்ச்சி அளிக்கிறது
ஒருபுறம் உலக நாடுகள் விண்வெளி அச்சுறுத் தல்களை அறிவியல் தரவுகள் மூலம் எதிர்கொள் கின்றன. மறுபுறம், நமது நாட்டில் பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கைகளை முக்கியப் பதவிகளில் இருப்பவர்களே ஊக்குவிக்கின்றனர். பூமியைச் சுற்றி ஆயிரக்கணக்கான விண்வெளிப் பொருட் கள் வருகின்றன. துல்லியமான தரவு சேகரிப்பு மற்றும் கணக்கீடுகள் மூலம், ஒரு விண்கல்லின் பாதையைத் துல்லியமாகக் கணிக்க முடியும். ஒருவேளை அது மோதும் அபாயம் இருந்தால், மு ன்கூட்டியே பேரழிவைத் தவிர்க்க முடியும். இந்த அணுகுமுறை முழுக்க முழுக்க நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், பசு சிறுநீரில் இருந்து மருந்து தயாரித் தல், பிரதமர் மோடியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, ஒன்றிய அமைச்சரின் புஷ்பக விமானம் போன்ற கூற்றுகளுக்கு எந்த அறிவியல் ஆதார மும் இல்லை. அறிவியல், ஒரு கூற்றை அங்கீ கரிக்க, பல்வேறு பரிசோதனைகள் மற்றும் ஆய்வுக ளை நடத்துகிறது. எந்த ஒரு கூற்றையும் ஆதாரம் இல்லாமல் ஏற்றுக்கொள்வது, ஒரு சமூகத்தின் பகுத்தறிவை பலவீனப்படுத்தும்.
நமது அன்றாட வாழ்க்கை முழுவதும் அறிவிய லுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாம் பயன் படுத்தும் செல்போன்கள், தகவல் தொடர்பு செயற் கைக்கோள்கள், மின்சார வாகனங்கள் என அனைத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகளே. அறி வியல் தொழில்நுட்பத்தை நம்பாமல், மூடநம் பிக்கைகளை நம்புவது, மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
அறிவியலைச் சரியான முறையில் பயன் படுத்துவதன் மூலம்தான் மனித குலத்தின் எதிர் காலத்தைப் பாதுகாக்க முடியும். எனவே மூடநம் பிக்கைகளை விடுத்து, அறிவியல் மனப்பான் மையை வளர்த்துக்கொள்வதே நமக்கு உண்மை யான பாதுகாப்பை அளிக்கும்.