கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
காசாவில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நேதன்யாகு ஆட்சியை சேர்ந்தவர்களுடன் ஒப்பந்தம் போடுவது பாலஸ்தீனத்துக்கு வரலாற்று ரீதியாக இந்தியா வழங்கி வரும் ஆதரவு நிலைப்பாட்டுக்கு எதிரானதாகும். பாலஸ்தீனத்தில் அமைதி திரும்பாமல் இஸ்ரேலுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது.
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
நமது மாபெரும் குடியரசின் ஜனநாயக செயல்முறைகளில் நிலையான நம்பிக்கையை கொண்டு இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறேன். எங்கள் சித்தாந்தப் போராட்டம் அதிக வீரியத்துடன் தொடரும்.
காங்கிரஸ் கட்சி தலைவர் அலோக் ஷர்மா
துணை ஜனாதிபதியாக இருந்த ஒருவர், தில்லி போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் தலைநகரத்தில் முன்னாள் துணை ஜனாதிபதியையே வீட்டுக் காவலில் வைப்பதுதான் பாஜக அரசாங்கத்தின் உண்மையான முகம். இது ஜனநாயகம் அல்ல. இது பயமுறுத்தும் விளையாட்டு.
சமாஜ்வாதி கட்சி தலைவர் ஐ.பி.சிங்
சுதிர் சௌத்ரி, அஞ்சனா காஷ்யப், அர்ணாப் கோஸ்வாமி போன்ற பல ஊடகவியலாளர்கள் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். எல்லா தொழிலதிபர்களும் செய்தி தொலைக்காட்சிகள் வைத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மோடி அரசாங்கத்துக்கு வேலை பார்க்கிறார்கள்.