மோசடிப் பேர்வழி அனில் அம்பானியின் மீது மீண்டும் ஒரு புதிய வழக்கு
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக சுமார் 2,929 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் அமலாக் கத்துறை மீண்டும் ஒரு புதிய பணமோ சடி வழக்கைப் பதிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது கடந்த மாதம் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப் பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த வழக்கில், அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள், எஸ்பிஐ வங்கிக்கும் இந்தியாவுக்கும் பண இழப்பை ஏற் படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள் ளது. இது தொடர்பாக, மும்பையில் அனில் அம்பானிக்கு தொடர்புடைய ஆறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. வங்கிக் கடன்கள் எவ்வாறு தவறா கப் பயன்படுத்தப்பட்டன எனவும் அந்த கடன்கள் எவ்வாறு எந்த நிறுவனங்கள் வழியாக திசைதிருப்பப்பட்டன என்ப தற்கான ஆதாரங்களைச் சேகரிப்பது தான் இந்த ஆறு இடங்களில் நடத்தப் பட்ட சோதனைக்குப் பின்னால் உள்ள நோக்கம் என சிபிஐ அதிகாரிகள் தெரி வித்தனர். ஏற்கெனவே ஜூன் 13 அன்று ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அனில் அம்பானியை “மோசடிப் பேர்வழிகள்” என்று வகைப்படுத்திய எஸ்பிஐ, ஜூன் 24 அன்று அது தொடர்பாக ரிசர்வ் வங்கிக் கும் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருந்தது. யெஸ் வங்கி கடன் மோசடி முன்னதாக, யெஸ் வங்கியின் கடன் மோசடி தொடர்பாக அனில் அம்பானி யிடம் அமலாக்கத்துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது. 2017 மற்றும் 2019 க்கு இடையில் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு யெஸ் வங்கியிடம் வாங்கிய சுமார் 3,000 கோடி ரூபாய் கடன்களை திசை திருப்பி விட்டது குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்தக் கடன்களை அம்பானிக்கு வழங்கலாம் என வங்கி நிர்வாகம் அங்கீ கரிப்பதற்கு சற்று முன்பு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அமலாக்கத்துறை கண்டறிந்தது.