சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டம் கோரி நெல்லையில் சிபிஎம் பொதுக்கூட்டம்
சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் புதனன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோர் உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், ஆர்.லீமாறோஸ், பி.கற்பகம், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.செல்லசுவாமி (கன்னியாகுமரி), க.ஸ்ரீராம் (நெல்லை), பி.உச்சிமாகாளி (தென்காசி), ஏ.குருசாமி (விருதுநகர்), கே.பி.ஆறுமுகம் (தூத்துக்குடி), மூத்த தலைவர்கள் வீ.பழனி, என்.முருகேசன், எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பிருந்தா காரத் ஆங்கில உரையை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழாக்கம் செய்தார்.