districts

img

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்

திருவாரூரில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், எடையூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவரது மகன் பிரவீன்(24) , மேலப் பெருமழை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரது மகள் வைஷ்ணவி(24) இருவரும் நாகப்பட்டினத்தில் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து கடந்த நான்காண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெண் வீட்டார் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி வேதாரண்யத்தில் இருவரும் பதிவு  திருமணம் செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.முருகையன் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து, சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.