2020 தில்லி கலவர சதி வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் செயல்பாட்டாளர் உமர் காலித், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பாஜக, இந்துத்துவா குண்டர்கள் கட்ட விழ்த்துவிட்ட இந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாக கூறி தில்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஜேஎன்யு ஆய்வு மாணவர் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். 4 ஆண்டுகளுக்கு மேலாக 10 பேரும் சிறையில் உள்ள னர். இதனை எதிர்த்து தில்லி உயர்நீதி மன்றத்தில் 9 பேரும் மேல்முறையீடு (10 பேரில் ஒருவர் முன்பாகவே மேல்முறையீடு) செய்திருந்தனர்.
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, உமர் காலித் உட்பட 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், உமர் காலித், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஷர்ஜீல் இமாம் மற்றும் குல்ஃபிஷா பாத்திமா ஆகியோர் ஏற்கனவே ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியியுள்ளனர்.