india

img

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - தேர்தல் ஆணையம் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நாடு முழுவதும் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை செய்து வருகிறது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பாஜகவுக்கு எதிரான வாக்  காளர்கள், சிறுபான்மையினரின் வாக்கு களை நீக்கும் மறைமுகத் திட்டத்துடன் கடுமையான நிபந்தனைகளை தேர்தல்  ஆணையம் விதித்தது. இதற்கு எதிர்க்கட்சி கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். உச்ச நீதிமன்றமும் பல்  வேறு கேள்விகளை, தேர்தல் ஆணையத் திற்கு எழுப்பியிருந்தது. இந்நிலையில் பீகார் மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்  பட்டுள்ளன. இதன் மூலம் பீகார் வாக்கா ளர்களின் எண்ணிக்கை 7.24 கோடியாக குறைந்துள்ளது. 

தற்போது, வாக்காளர்களுக்கான அடையாள ஆவணங்களாக கடவுச்சீட்டு, பிறப்புச் சான்று உள்பட 11 ஆவணங்களை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள நிலையில், ஆதாரை 12-ஆவது ஆவணமாகச் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில் பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை செய்து வருகிறது.