மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி
ஈரோடு, அக்.29- மருத்துவம் - மக்கள் நல் வாழ்வுத்துறையின் சார்பில், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ச.கந்த சாமி துவக்கி வைத்தார். ஈரோடு தந்தை பெரியார் அரசு மருத்துவமனை, பல் நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு வளாகத்தில் புதனன்று மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் எஸ்.கந்தசாமி துவக்கி வைத்து, வண்ண பலூன்கைளை பறக்கவிட்டும், பொதுமக்களுக்கு துண்டு பிர சுரங்களை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது. மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை மாதவிடாய் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு மாதத்துக்கு ஒருமுறை சுய பரிசோதனை செய்து கொள்வது சிறந் தது. மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள், வீக்கம், வலி அல்லது அசாதாரண மாற்றங் கள் உள்ளதா? என்பது போன்ற மார்பக சுய பரிசோதனை, மருத்துவர் அல்லது மருத்துவப் பயிற்சியாளர்களை சந்தித்து மார்பகப் புற்றுநோயின் அறிகுறி களையும் கட்டிகளையும் கண்டறியலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எக்ஸ்-ரே சோதனை, வயது மற்றும் ஆபத்து காரணி கள் பொறுத்து மேமோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் மூல மாகவும், ரத்தப் பரிசோதனைகள் மூலம் சில சந்தரப்பங்களில் மார்பகப் புற்றுநோய் கண்டறிய அல்லது மீண்டும் வருவதைக் கண்டறிய முடியும். அறிகுறி கண்டறியப் பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தற்காத் துக் கொள்ள முடியும், என்றார். இந்நிகழ்ச் சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்து வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
