கோவை,நவம்பர்.08- கோவையில் 360 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த ரமேஷ் என்பவரிடமிருந்து சுமார் 3 லட்சம் மதிப்புள்ள 360 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்தவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.