states

img

தில்லி: நச்சு நுரையை ஷாம்பூ போல் பயன்படுத்தும் பெண்கள்

தில்லியில் யமுனை ஆற்றில் மிதந்து வரும் நச்சு நுரையை பெண்கள் பலர் ஷாம்பூ போல் தலைக்கு தேய்த்து குளிக்கின்றனர்.

தலைநகர் தில்லியின் காலிந்தி கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்கிறது. இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருகிறது.

இந்த நிலையில், நச்சு நுரையின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலர் ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். அதிலும் சில பெண்கள் நச்சு நுரையை ஷாம்பூ போல் தலைக்கு தேய்த்து குளிக்கும் அதிர்ச்சிகர காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இத்தகைய செயல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.