states

img

தில்லி யமுனை ஆற்றில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நச்சு நுரை!

தில்லி யமுனை ஆற்றில் நாளுக்கு நாள் நச்சு நுரை அதிகரித்து வருவது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தில்லியில் காற்று மாசு மற்றும் நீர் மாசு பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, ரசாயன கழிவுகள் காரணமாக தில்லி காலிந்தி கஞ்ச் பகுதியிl உள்ள யமுனை ஆற்றில் நச்சு நுரை பெருக்கெடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

வெள்ளை நிற பனிபடலமாக ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. நச்சு நுரையால் யமுனை ஆற்று நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ரசாயன நுரையால் தோல் நோய்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதால் யமுனை ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றாத வகையில் போர்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.