games

img

ஐசிசியின் சிறந்த மதிப்பீட்டை பெற்றது சேப்பாக்கம் மைதானம்!

கடைசியாக நடந்த 5 டெஸ்ட் போட்டிகளில், சென்னை சேப்பாக்கம் மைதானம் சிறந்தது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மதிப்பீட்டை ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்திய அணி சமீபத்தில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த 2 டெஸ்ட் தொடர்களும் இந்தியாவில் நடைபெற்றது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் கீரின் பார்க் கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே, வான்கடே மைதானம், மும்பை, எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த 5 மைதானங்களில் எந்த மைதானம் சிறந்தது என்ற மதிப்பீட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சிறந்த பிட்ச் மற்றும் சிறந்த அவுட் பீல்ட் மதிப்பீட்டை ஐ.சி.சி வழங்கியுள்ளது. சின்னசாமி, புனே, வான்கடே மைதானங்களுக்கு திருப்திகரமானது எனவும், கான்பூர் மைதானத்திற்கு திருப்தியே இல்லையெனவும் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.